• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் உயிரிழப்பு

Mrz 27, 2023

துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது.

இதில் 29 பேர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 58 படகுகளில் இருந்து 3,300 பேரை மீட்டு ஒருங்கிணைத்ததாக, இத்தாலிய கடலோர காவல்படையினர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

துனிசியா ஐரோப்பாவிற்கு செல்ல விரும்பும் புலம்பெயர்ந்தோரின் மையமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு இத்தாலியின் கரையில் இறங்கிய குறைந்தது 12,000 புலம்பெயர்ந்தோர் துனிசியாவில் இருந்து வெளியேறியதாக ஐ.நா புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆனால், கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 1,300 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed