• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். கோப்பாய் பகுதியில் விபத்து! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Mrz 27, 2023

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனது தேவை நிமிர்த்தம் சென்ற வேளை இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
கோண்டாவில் வன்னியசிங்கம் வீதியை சொந்த இடமாகவும் தற்போது கோப்பாய் வடக்கு, இலகடியில் திருமணம் செய்து வசித்து வரும் ஒரு பிள்ளையின் தந்தையான ஜனார்த்தனன் (வயது -37) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed