கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபடும் நபர்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அறவிடப்பட்ட 25,000 ரூபா அபராதத்தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அதோடு விமான நிலையத்திற்குள் தங்கியிருக்கும் சாரதிகள், தரகர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Von Admin