• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!வெளியான அறிவிப்பு

Apr 16, 2023

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16.04.2023) வெளியிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் 50 கிலோமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்கு, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் முக்கியமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களின் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed