வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இடம்பெற்றுள்ளது.

இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 வயதுடை ஆண் ஒருவரும் 21 மற்றும் 22 வயதுடைய இரு பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சாலையின் முழு அகலத்தையும் மூடாத தடுப்புகள் மூடப்பட்டிருந்தாலும், கார் ஒரு குறுக்கு வழியில் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது

Von Admin