கனடாவின் ரொரன்டோ காவல்துறையினர் முன்னெடுத்த வாகன திருட்டு விசாரணையில் 119 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர்.
23 வயதான தேஷான் யோகராஜா, 23 வயதான திஷாநாத் சற்குணராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்களில் பெரும்பாலானவர்கள் Toronto பெரும்பாகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இதில் கைதானவர்கள் மீது 314 குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.