• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்ணன் தங்கை  சண்டை: தங்கை விபரீத முடிவு

Mai 6, 2023

முகத்துக்கு பூசம் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதால் பதினோரு வயதுடைய மாணவி தன்னுயிரை‌ மாய்த்துக்கொண்ட சம்பவம் தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் துயரமான சம்பவம்.

இச்சம்பவம் நேற்று (05) மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நேற்று போயா தினம் என்பதால் அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆலயத்திற்கு செல்ல தயாராகும். போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.

 இதன் போது அண்ணன் தங்கையிடம். ஏன் எனது  கிரீமை போடுகின்றாய் என கேட்டுள்ளார்.

அதன் பின்னர் பாட்டியுடன் குறித்த மாணவன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு மறுத்துள்ளார். இதை அடுத்து பாட்டியும் மாணவனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்ட  ஆலயத்தில் வழங்கப்பட்ட ‌ அன்னதானத்தினை தங்கைக்கும்  எடுத்துகொண்டு  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது   அயலவர்கள் உன்னுடைய சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.

 இதனையடுத்து குறித்த இளைஞன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த போது தனது தங்கை தன்னுயிரை‌ மாய்த்துக்கொண்ட விடயம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தலவாகலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது எனது தங்கையிடம் அன்பாக இதனை கூறியதாகவும், இவ்வாறு செய்து கொள்ளுவார் என தனக்கு தெரியாது எனவும் எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும்  பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது வாக்கு மூலம்  வழங்கியுள்ளார்.

குறித்த மாணவி தரம் 08 கல்வி கற்பது குறிப்பிடத்தக்கது.

 இறந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவியின் தாய் தந்தை கொழும்பில் தொழில் புரிவதாகவும் மணவியும் தனது சகோதரரும் பாட்டின் அரவணைப்பிலேயே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed