• Mi.. Juni 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை!

Mai 10, 2023

யாழ்.இளவாலை – வசந்தபுரம் பகுதியில் நேற்று(09) மாலை  இரண்டரை வயது குழந்தையொன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம், உறவினர்களிடம் இன்று(10) கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.