நாட்டில் நிலவும் மோசமான வானிலை தொடர்பில் நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

சாரதிகள் நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது, ​​60 கிலோ மீட்டர் மணிநேர வரம்பில் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை வாகனங்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட இடைவெளியை பேண வேண்டும் எனவும் பாதைகளில் இருள் சூழ்ந்திருப்பதால், முன் மற்றும் பின் விளக்குகளை எரியச் செய்யுமாறும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Von Admin