• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கொடூர விபத்து!  இளைஞன் தலை நசுங்கி பலி!

Mai 29, 2023

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த நபர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை தட்டியுள்ளார்.

இதனால், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், பின்னால் வேகமாக வந்த லொறியின் சக்கரம் அவரது தலைக்கு மேல் ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த 28வயதான இராசரத்தினம் அபிதாஸ் என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed