• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மட்டக்களப்பில் நச்சு மீனை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பலி!! 3 பேர் ஆபத்தான நிலையில்

Jun 9, 2023

மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.
குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இவ் அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed