• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி!

Jun 12, 2023

ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிட்டா என்ற இடத்தில் திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. ஒரு வளைவில் அந்த பஸ் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே ரோட்டில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சுக்குள் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 

11 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சுக்கு அடியில் சிலர் மாட்டி இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி நடந்தது. விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed