• Sa.. Juni 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு !

Juni 25, 2023

நேற்றையதினம் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களில், 15 வயது மற்றும் 04 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கண்டி, பல்லேகல பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று பிற்பகல் உறவினர்கள் குழுவுடன் குளித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் எம்பிட்டிய வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை சிலாபம், தித்தமடம, தெதுரு ஓயாவில் மக்கள் குழுவுடன் குளித்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்பத்துடன் உல்லாசப் பயணமாகச் சென்றிருந்த வேளையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.