• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பளையில் சிகரட் லைட்டர் வெடித்ததில் உயிரிழந்த குடும்ப பெண்

Jun 30, 2023

லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – பளை – இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற வேளையில் அது வெடித்து அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியுள்ளது.

எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed