• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூமியின் மிக அதிக வெப்பமான நாளாக ஜூலை 3 பதிவு

Jul 6, 2023

கடந்த 3-ந்தேதி சராசரி உலக வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

உலக அளவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக வெப்பமான நாளாக கடந்த ஜூலை 3-ந்தேதி பதிவாகியுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் கணிப்புக்கான அமெரிக்க தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 3-ந்தேதி சராசரி உலக வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிக தகிக்கும் வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அதை விட அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவுகிறது. கடந்த 3-ந்தேதி அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் வெப்பநிலை 46 டிகிரியை எட்டியது. தெற்கு டெக்சாசில் அதிகபட்சமாக சமீபத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed