• Di.. Juli 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டனில் இருந்து யாழ் வந்த சிறுவன் கடலில் மூழ்கி மரணம்!!

Juli 9, 2023

யாழ்.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன்( 08.07.2023) கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.லண்டனில் இருந்து உறவினரின் மரண சடங்கிற்கு வந்திருந்த 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.