• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பொலனறுவை ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி!! பலர் காயம்

Jul 10, 2023

மானம்பிட்டிய, கொட்டாலிய பாலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஆற்றில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மானம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும், சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed