• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் காணாமல்போன இலங்கையர் சடலமாக!

Jul 14, 2023

அமெரிக்காவில் காணாமல்போன இலங்கையர் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை இரண்டாம் திகதி காணாமல்போன இலங்கையர்  ஹசித் நவரட்ண, ஜோர்ஜியா அட்லாண்டாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அட்லாண்டாவில் கார் ஒன்றினுள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என கெனோசோவ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை இரண்டாம் திகதி இவர் காணாமல்போன நிலையில், அவர் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில்  அவரது உடல் மீட்கப்பட்டமை குறித்து பொலிஸ் திணைக்களம் முகநூலில் பதிவிட்டுள்ளது.

ஹசித் நவரட்ண தொடர்பில் எங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது,விசாரணைகளின் அடிப்படையில் அந்த உடல் ஹசீத்நவரட்ண என்பது உறுதியாகியுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed