• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உயிரிழந்த உயர்தர வகுப்பு மாணவி

Jul 17, 2023

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது 19) என்ற மாணவியே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கடந்த 12 ஆம் திகதி தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மாணவியின் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். எனினும் மாணவிக்கு எதனால் தீக்காயம் ஏற்பட்டது என்பது தொடர்பிலான தகவல் வெளியாகவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed