• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சாவகச்சேரியில் வீடுடைத்து நகை திருட்டு

Aug 1, 2023

சாவகச்சேரியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி கல்வயல் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன் மேசன் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் மனைவி அருகிலுள்ள காணிக்கு ஆட்டைக் கட்டி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவின்பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இதன் போது உள்ளே சென்று பார்த்தபோது 3 இலட்சம் ரூபா பணமும், மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டமை தெரியவந்தது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed