அமெரிக்க நாட்டில் 35 வயது பெண்ணொருவர் நான்கு போத்தல் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரன் தெரிவிக்கையில்,

வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு குறித்த பெண் 20 நிமிடங்களில் 4  போத்தல் தண்ணீரை அருந்தியுள்ளார்.

அதாவது 20 நிமிடங்களில் சுமார் 2 லீற்றர் தண்ணீர் குடித்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்து, சுயநினைவை இழந்துள்ளார்.

அதன் பின்னரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின் உயிரிழந்தார் என குறிப்பிட்டார்.

Von Admin