• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.குடாநாட்டு வியாபாரிகள் கவலை !

Aug 25, 2023

யாழ்.மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை உடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையிலும் பழங்கள், இளநீர் போன்றவற்றின் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக குடா நாட்டில் வெப்பமான காலநிலை நிலவும் காலத்தில் பழம், இளநீர் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும்.

எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக பழம், இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலை நிலவும் காலத்தில் பொதுமக்கள் பழம் வாங்க வருவார்கள் தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.

இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்தாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed