• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

350 குடும்பம் குடி நீர் இன்றி தவிக்கும் நிலை!

Aug 30, 2023

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆர்.பி.கே.பிலாடேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட புரவுன்ஷீக் பிரிவில் உள்ள குடிநீர் விநியோக திட்டத்திற்கு வழங்கபட்டிருந்த மின் இணைப்பு பட்டியல் பணம் செலுத்தாத காரணமாக நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக அந்த பிரிவில் உள்ள 350 குடும்பம் குடி நீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அங்கு உள்ள பாவனையாளர் கருத்து தெரிவிக்கையில்,

தோட்டத்தில் உள்ள குடியிருப்பு தொழிலாளர்கள் பட்டியல் பணம் செலுத்தபட்ட போதும் அத் தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் பட்டியல் பணம் செலுத்த படாத காரணமாக 250000 ரூபாய் மின் பட்டியல் பணம் செலுத்த படாத காரணமாக மின் துன்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

தோட்ட நிர்வாகிகள் பாவிக்கும் நீர் பட்டியல் அனைத்தும் தோட்ட நிர்வாகம் கட்ட வேண்டும் எனவும் அப் பணம் கட்டினால் மட்டுமே மீள குடி நீர் பெற்று கொள்ள முடியும் என கூறுகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed