வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆறுகளின் நீர்மட்டத்தை அறிவிக்க நீர்ப்பாசனத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளது என நீர்பாசன (நீரியல்) பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

மக்கள் rivernet.lk என்ற இணையத்தளத்தை அணுகி ஆறுகளின் நீர் மட்டங்களை அறிய முடியும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தற்போது, ​​களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர் மட்டங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் மக்கள் இணையதளத்தை அணுகலாம்.

Von Admin