யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலயத்திற்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் நல்லூர் குறுக்கு வீதியை சேர்ந்த 74 வயதான இரத்தினசாமி நித்தியசெல்வம் என்ற ஒரு பிள்ளையின் தாயான மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 4ம் திகதி இரவு 7 மணிக்கு நல்லூர் ஆலயத்திற்கு செல்வதற்காக யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியை கடந்த போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாகி விழுந்து மயங்கிய நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (10-09-2023) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மரண விசாரணையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Von Admin