லவாக்கலையில் பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை விழுந்ததால் அம்மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பூண்டுலோய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரபத்தனை பம்பரகெலே அபகன்லி தோட்டத்தில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

​கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அக்கரப்பத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவிதத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

Von Admin