வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில்  சுவிஸில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில்  சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதான  ஒரு பிள்ளையின் தந்தையே  உயிரிழந்துள்ளார்.

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காக தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் இந்த விபரீத முடிவை எடுத்து எடுத்துள்ளதாக   கூறப்படுகின்றது.

 அளவுக்கு அதிகமான மன அழுத்தம்

உயிரிழந்தவரின்  மனைவி மற்றும் பிள்ளை சுவிஸ்நாட்டில் வசித்து வரும் நிலையில்  குறித்த நபர்  குடும்பத்தை பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்ததாதகவும் கூறப்படுகின்றது.

அத்துடன்  அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் அவர்  இருந்ததாகவும்  உறவினர்கள்  தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும், விசாரணைகளின் பின்னரே  அவரது உயிரிழப்புக்கான காரணத்தை   உறுதியாக கூறமுடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin