• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!!

Sep 23, 2023

வவுனியா பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார்.

ஓமந்தையில் வெதுப்பம் நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த வாகனமொன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி. தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed