• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில், பால் புரையேறி 3 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு !

Sep 24, 2023

பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த குழந்தையின் தாய் இன்று காலை குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். இதன் போது குழந்தை அசைவற்று காணப்பட்டது.

இந்நிலையில் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பால் புரையேறியே குழந்தை இறந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed