• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை !

Sep 30, 2023

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற தெரிவுக்குழு பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும். அவை அனைத்தும் மிக முக்கியமானவை. அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து விடயங்களையும் நடைமுறை ரீதியில் செயற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு வருமானம் தேவைப்படுகின்றது. அதேபோல பொருளாதாரம் தொடர்பில் தற்போது அனைவரும் பாரிய அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும். இறுதிக்கட்ட செயற்றிட்டங்களுக்கு செல்வதற்கு முன்னதாக வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதையே நாங்கள் சிந்திக்கின்றோம்.

பகுதி பகுதியாக வரியைச் செலுத்தும் வாய்ப்பை நாங்கள் அவர்களுக்கு வழங்குகின்றோம். அதேபோல வரி செலுத்தாதோரின் வங்கிக் கணக்கை நிறுத்துவதற்கு எமக்கு அதிகாரம் உள்ளது.

அரசாங்கத்திற்கு வருமானம் தேவைப்படுவதால் நாம் சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சிகளை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

அதேபோன்று பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வரியை செலுத்த சிரமப்படுபவர்கள் தொடர்பிலும் நாங்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவனம் செலுத்தியுள்ளோம்  என குறிப்பிட்டுள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed