இந்தியாவில் ஒரு தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனியார் உணவகம் ஒன்றிற்கு ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

குறித்த குடும்பத்தினர் உணவுக்காக பிரியாணி பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், அவர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்ட பிரியாணியில் இறந்த நிலையில், பூரான் ஒன்று காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கோபமடைந்த குடும்பத்தினர் உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு துறையினருக்கு முறைப்பாட்டையும் அளித்துள்ளனர்.

 

Von Admin