• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புத்தூர் பகுதியில் தென்னை மரத்தில் இருந்த விழுந்த 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

Okt 11, 2023

யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அந் நபர் கடந்த 6ஆம் திகதி தென்னை சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் கீழே விழுந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed