• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தொடருந்தில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு !

Okt 13, 2023

தொடருந்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி இரவு தச்சன்தோப்பு தொடருந்து  நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed