• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு 

Okt 18, 2023

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் டின் மீன்களின் விலை 35 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 ரூபாவாகும்.

உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை ரூ.5 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.545 ஆக உள்ளது. ஒரு கிலோ பச்சை பயறின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்தலியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாவாகும். மேலும் ஒரு கிலோ கொத்தமல்லியின் புதிய விலை ரூ.540 ஆகவும், அதன் விலை ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed