• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் பருத்தித்துறையில் தனியார் பஸ் சாரதி மீது வெட்டு!!

Jan 10, 2024

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சாரதி மீதே இன்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை முகமூடி அணிந்து உந்துருளியில் வந்தவர்கள் குறித்த தனியார் பேருந்து சாரதி மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இந்நிலையில் படுகாயமடைந்த பேருந்து சாரதியை ஊடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று,

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள்வெட்டை நடத்தியவர்கள் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed