• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் விமானக் கதவை திறந்து கீழே வீழ்ந்த பயணி 

Jan 11, 2024

கனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்க ஆயத்தமான நியைில் பயணி கீழே வீழ்ந்துள்ளார்.

விமானத்தின் அவசர வெளியேறல் கதவை பயணி ஒருவர் திறந்துள்ளார்.

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான AC056 என்ற விமானத்திலிருந்து குறித்த பயணி கீழே வீழ்ந்துள்ளார்.

விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கீழ் கலவைக்குள் பயணி வீழ்ந்து காயமடைந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடாபில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பயணி கீழே வீழ்ந்து காயமடைந்த காரணத்தினால் விமானப் பயணம் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

எதனால் பயணி விமானத்தின் கதவை திறந்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed