• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் மக்களிடம் பணமோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Jan 14, 2024

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபா மோசடி செய்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ்ப்பாண நபரொருவர் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்.மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு, பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை நெல்லியடி பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருந்தபொழுது கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபர் சுன்னாகம் உட்பட யாழில் பல பிரதேசங்களில் போலி விசாக்களை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியதுடன், 1 கோடிக்கு மேல் பணம் பெற்று விட்டு தலைமறைவாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின் பொலிஸாரால் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed