• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணமானார்!!

Jan 25, 2024

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் பவதாரிணி காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் (24-01-2024) இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed