• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி!

Jan 25, 2024

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம, வெலேவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இராணுவ விஷேட படையின் லெப்டினன்ட் பதவி வகித்த ஜீவக செனவிரத்ன மற்றும் அவரது 10 வயதான மகன் மனுஜ பிரபாஸ்வர ஆகிய இருவருமே இந்த விபத்தில் உயிரந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இராணுவ வீரர், மகன் மற்றும் மனைவி ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் ரஜமஹா விகாரைக்கு முன்பாக லொறியுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed