• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாகன விபத்தில் 17 வயது சிறுவன் பலி!

Jan 28, 2024

பொலன்னறுவை – தம்பாளையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தம்பாளை – றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியில் நேற்று இடம்பெற்றது.

குறித்த வீதியால் சிறுவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது லொறியுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் தம்பாளை வேப்பம் புரயில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed