• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கடவுச்சீட்டுக் கட்டணம் 5000 ரூபாவினால் அதிகரிப்பு !

Jan 31, 2024

நாட்டில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக காணப்பட்டது.

இந்த கட்டணத் தொகை நாளைய தினம் முதல் பத்தாயிரம் ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.

குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக இனி வரும் காலங்களில் ஒருவர் பத்தாயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed