• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கிசூடு

Feb 9, 2024

புத்தளம் ஆனமடு காவல்துறை பிரிவிற்குற்பட்ட தட்டேவ பகுதியில் நேற்று இரவு 7 மணியவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆனமடுவ பேத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய எம்.எம் மல்லவ குமார என்பவரே இடது கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

 

ஆனமடுவ தட்டேவப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். புத்தளம் ஆதார வைத்தியசாலையில் முறையான மருத்துவ வசதி இல்லாமையினால் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டு நடாத்திய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்போது ஆனமடுவ காவல்துறையினர் மற்றும் புத்தளம் காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்  

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சிறுப்பிட்டி இணையம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed