• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுகாதாரத் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு நாளையும் தொடருமாம்

Feb 13, 2024

இன்றையதினம் 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நாளை புதன்கிழமையும்   நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கூட்டிணைவின் ஒருங்கிணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

குறித்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (13)  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள சிறுப்பிட்டி இணையம். 

 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed