• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிரடி காட்டும் சிவகார்த்திகேயன்

Feb 17, 2024

சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. அதற்கமைய , குறித்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் நாயகியாக ‘சப்தசாகரச்ச எல்லோ’ படத்தில் நடித்த ருக்மணி ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் 90 கோடி இந்திய ரூபா வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed