• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் போதைப் பொருள் பாவனையால் இருவர் பலி!!

Feb 18, 2024

யாழ்ப்பாணத்தில் நேற்று போதைப்பொருள் பாவனையால் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயது இளைஞன் உயிரை மாய்த்துள்ளார். நீண்டநாளுக்கு பின்னர் போதைப்பொருள் பாவித்த 26 வயதான இளைஞன் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களை கலந்து அதிகளவில் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயதானவர் உயிரை மாய்த்த சம்பவம் மல்லாகத்தில் நடந்தது. அந்த இளைஞன் போதைப்பொருள், போதை மாத்திரைகளுக்கு அடிமையானவர். போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிறைச்சாலையிலிருந்தவர் அண்மையில்தான் விடுதலையாகியிருந்தார்.

தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பகுதியில் 26 வயதான இளைஞன் ஒருவர் தனது நண்பருடன் ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார். பின்னர் நண்பருக்கு தெரியாமல் சென்று ஐஸ் போதைப்பொருளும் உட்கொண்டார்.

அதிகமான போதைப்பொருள் பாவனையால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் வீட்டுக்கு அருகிலேயே நடந்தது. இளைஞன் தனது தாயாருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, ஆபத்திலிருப்பதை தெரிவித்தார்.தாயார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போதும், இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed