• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மீண்டும் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா

Feb 18, 2024

தனியார் தொலைக்காட்சியொன்றில் நடந்த இசைநிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வுவொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாயில் இன்று(18) மதியம் 3 மணிக்கு வட அல்வை இளங்கோ சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அல்வாய் வடக்கு நாவலடி சந்தியில் இருந்து கில்மிஷா வாகனத்தில் நிகழ்வு மைதானம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.

„கான வாணி“ என்ற பட்டம்

மன்னார் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரனால் கில்மிஷாவுக்கு „கான வாணி“ என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு கில்மிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed