• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் நுங்கு வெட்ட பனைமரம் ஏறியவர் பரிதாப மரணம்!

Apr 11, 2024

யாழ்ப்பாண பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் (10-04-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் (41 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் கூற்று சோதனைக்கு பிறகு குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed