• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..! இருவர் பலி

Apr 12, 2024

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் இந்த இரண்டு மரணங்களும் நேற்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளிகள் இருவர் உயிரிழந்ததையடுத்து  சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற விடுதி தொகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed