• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புதுக்குடியிருப்பு பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.

Apr 12, 2024

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கைவேலிப்பகுதியில் வயல்நீர் வடிந்தோடும் குட்டை ஒன்றிற்குள் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் (11) இடம்பெற்றுள்ளது.

தேவிபுரம் அ பகுதியினை சேர்ந்த 65 அகவையுடைய முனுசாமி திருச்செல்வம் என்பவர் கூலி வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் கைவேலி வயல்வெளிப்பகுதியில் காணப்படும் குறித்த குட்டைக்கு அருகில் அவரது மிதிவண்டி காணப்பட்டுள்ளது.

இதனை அறிந்த வீதியால் சென்றவர்கள் அவரை தேடி பார்த்தபோது அவர் குறித்த குட்டைக்குள் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்,

குட்டைக்குள் இருந்து மீட்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார், அவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed