• Sa. Okt 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் அதிகரித்துள்ள முட்டை விலை !

Apr 12, 2024

தற்போது உள்ளூர் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை தற்போது 50 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தற்போது முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளமையே உள்ளூர் சந்தையில் விலை அதிகரிப்புக்கு காரணம்.

இதற்கமைய உள்ளூர் முட்டையின் மொத்த விலை 50 ரூபாவாகவும், சில்லறை விலை 55 ரூபாவாகவும் உள்ளது. எவ்வாறாயினும், இடைத்தரகர்கள் விலையை உயர்த்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முட்டையின் விலை உயர்த்தப்பட்டால் மீண்டும் இந்தியாவில் இருந்து, முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed